7. அமர்நீதி நாயனார்

அமைவிடம் : temple icon.amarneethiyar
வரிசை எண் : 7
இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவி : பர்வத சுந்தரி
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : வணிகர்
அவதாரத் தலம் : கீழப் பழையாறை
முக்தி தலம் : திருநல்லூர்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆனி பூரம்
வரலாறு : சோழ நாட்டுப் பழையாறை என்னும் பதியில் வணிகர் குலத்தில் அமர்நீதி நாயனார் அவதரித்தார். பெரும் செல்வந்தரான அவர் சிவனடியார்களுக்கு அவர்கள் குறிப்பறிந்து அரைஞாணும், கோவணமும் கொடுத்து உதவி வந்தார். அடியார்கள் தங்குவதற்கு திருநல்லூரில் மடம் ஒன்றும் கட்டினார். அங்கே திருவமுதும் அளித்து வந்தார். இவர் பெருமையை உலகறியச் செய்ய இறைவன் பிரமசாரி வேடத்தில் ஒரு நாள் இவர் இல்லம் வந்தார். தாம் கொண்டு வந்த கோவணம் ஒன்றை நாயனாரிடம் அளித்து இதனைப் பத்திரப்படுத்தி வைப்பீர். குளித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லி செல்கிறார். மீண்டும் வந்து அதனைத் திரும்பக் கேட்டார்.
  இறைவன் திருவிளையாடலால் கோவணம் மறைந்து போக நாயனார் வேறு புதிதாகத் தருவதாகக் கூறியும் பிரமசாரியாக வந்தவர் கேளாமல் தாம் கொடுத்த கோவணம்போல் மற்றொன்று எம்மிடம் உள்ளது. அதன் எடைக்கு ஈடாக நீர் வேறு கோவாணம் தருவீர் என்கிறார். அதற்கேற்ப நாயனாரும் தம்மிடம் இருந்த கோவணங்களையெல்லாம் துலாக்கோலின் ஒரு தட்டில் இட்டு இன்னொரு தட்டில் இறைவன் தந்த கோவணத்தையும் இட்டார். துலாக்கோல் நேராகவில்லை. தம்மிடம் இருந்த பொருள்களையெல்லாம் ஒவ்வொன்றாக இட்டு, கடைசியில் தான் தன் மனைவியுடன் ஐந்தெழுத்தை ஓதியவாறே தட்டில் ஏறி நிற்கிறார். துலாக்கோல் நேராகிறது. அனைவரும் வியக்க அத்துலாக்கோலே விமானமாக மாற சிவலோகம் அடைந்தார்.
முகவரி : அருள்மிகு. பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், கீழப்பழையாறை – 612703 கும்பகோணம் வட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : 1.திருமதி. ருக்குமணியம்மாள்
அருள்மிகு. சோமேசர் கோயில்
பழையாறை வடதளி, பட்டீஸ்வரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம் - 612703
2.திருமதி. என். தேவிகாராணி,
தொலைபேசி : 0435-3919971
அலைபேசி : 9994847404

இருப்பிட வரைபடம்


சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார் 
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக் 
கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி 
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்

    	           - பெரிய புராணம் 504
பாடல் கேளுங்கள்
 சிந்தை செய்வது


Zoomable Image
நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க